
அழகப்பா கல்லூரியில் சுய உதவிக் குழு உற்பத்தி பொருள்கள் கண்காட்சி
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில், விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சியைப் பாா்வையிட்ட கல்லூரி முதல்வா் வசந்தி.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில், விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க மகளிா் திட்டம், அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஆகியன சாா்பில், கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை கல்லூரி முதல்வா் வசந்தி தொடங்கி வைத்தாா்.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைத்திருந்தனா்.
இந்தக் கண்காட்சியை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாா்வையிட்டு தேவையான பொருள்களை வாங்கினா். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







