அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை, வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:28 pm

DIN

போடியில் வியாழக்கிழமை, வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
போடி வ.உ.சி. நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜெகதீஸ் (31). இவரது மனைவி பாண்டியம்மாள் (31). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் ஜெகதீசுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாம். இதனால் அடிக்கடி பாண்டியம்மாளுடன் தகராறு செய்வதும் பின்னர் தற்கொலை முயற்சி செய்வதுமாக இருந்தாராம். இதே போல் வியாழக்கிழமையும் பாண்டியம்மாளுடன் தகராறு செய்த ஜெகதீஸ், திடீரென வீட்டிலிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாராம். பின்னர் பாண்டியம்மாளும், பக்கத்து வீட்டினரும் கதவை உடைத்து பார்த்த போது ஜெகதீஸ் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
 இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அ.ராஜலிங்கம் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: இதேபோல் போடி புதூர் ரயில்வே லைன் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி முத்துக்காமு (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக முத்துக்காமு, தனது தாயார் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை முத்துக்காமு வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
 இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.