தேவாரம் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் புகார்
தேனியில் தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்து புதன்கிழமை, அப்பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.வசந்தியிடம் மனு அளித்தனர்.


தேனியில் தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்து புதன்கிழமை, அப்பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.வசந்தியிடம் மனு அளித்தனர்.
தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கலைப் பிரிவில் படிக்கும் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாக புகார் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.
இப் பிரச்னை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளிக்குமாறு அதிகாரிகள் கூறியதால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திகுச் சென்று, அங்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.வசந்தியிடம் மாணவ, மாணவிகள் புகார் மனு அளித்தனர்.
இந்தப் புகார் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...