இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உத்தமபாளையம் வாரச்சந்தையில் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்

தேனி மாவட்டம்  உத்தமபாளையத்தில் புதன்கிழமை நடைபெறும்  வாரச் சந்தைக்கு வியாபாரிகளின் வருகை குறைந்ததால் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:03 am

DIN

தேனி மாவட்டம்  உத்தமபாளையத்தில் புதன்கிழமை நடைபெறும்  வாரச் சந்தைக்கு வியாபாரிகளின் வருகை குறைந்ததால் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 இச்சந்தையில் காய்கறிகள், பலசரக்கு, பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வருவதால்  உத்தமபாளையம் உள்பட அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம்,  ராயப்பன்பட்டி என சுற்றியுள்ள  10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுகின்றனர். அதே  போல கேரளத்தை  சேர்ந்த பொதுமக்களும் வருகின்றனர். இச்சந்தைக்கு தொடக்க காலங்களில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்தனர். அப்போது நியாமான விலையில் அனைத்து பொருள்களும் விற்கப்பட்டன. இந்நிலையில் இந்த வாரச்சந்தையில் கடந்த சில வாரங்களாக வியாபாரிகளின் எண்ணி  வெகுவாக குறைந்து விட்டது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்து விற்பனை  செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில்  புகார் எழுந்துள்ளது.
  வாரச்சந்தையில் புதன்கிழமை விற்கப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): கத்தரிக்காய்- ரூ.90,  முல்லங்கி- 80, நூக்கல்- 80 , தக்காளி- 40, சின்னவெங்காயம்- 120, பெரிய வெங்காயம்- 40, முட்டைக்கோஸ்- 80, உருளைக்கிழங்கு- 20, வெண்டைக்காய்- 60,  பீன்ஸ்- 80, பீட்ரூட்- 40, பச்சை மிளகாய்- 60  என அனைத்து காய்கறிகளும் கூடுதல்விலைக்கு விற்பனை செய்வதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும்  கம்பம்,  சின்னமனூர்  மற்றும் கோம்பை  நடைபெறும் வாரச்சந்தைகளுடன் ஒப்பிடுகையில் உத்தமபாளையத்தில் விலை சற்றும் அதிகமாகவே  விற்பனை செய்யப்படுவதாகவும்  அவர்கள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், உத்தமபாளையம் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருந்தனர். ஆனால் தற்போது 100-க்கும் குறைவாகவே வியாபாரிகள் உள்ளனர்.  இதனால் பொதுமக்களுக்கு  தேவையான  காய்கறிகள் விற்பனைக்கு வருவதில்லை.  இதற்கு காரணம்  வியாபாரிகளுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளையும்  உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் முறையாக செய்யவில்லை.  ஆனால் மற்ற சந்தையில் வாங்கும் வரியை போன்றே வியாபாரிகளிடம்  ரூ.30  முதல்  வசூல் செய்யப்படுகிறது. ஆனால்  வாரச் சந்தையை முறையாக பராமரிப்பு செய்யாத நிலை உள்ளது. மழைக் காலத்தில் சந்தைக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைகின்றனர்.
 எனவே,  மழைக் காலத்தில்  தண்ணீர் தேங்காமல்  இருக்க முறையான வடிகால்வாய் அமைத்து, அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் வருங்காலங்களில்   வியாபாரிகளின் வருகை  அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.