மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

போடியில் ஆலங்கட்டி மழை: சுவர் இடிந்து தம்பதி காயம்

போடியில் திங்கள் கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழையால் வெள்ளம் வீடு, கடைகளுக்குள் புகுந்தது. போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:19 am IST

போடியில் திங்கள் கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழையால் வெள்ளம் வீடு, கடைகளுக்குள் புகுந்தது. போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.
     போடியில் திங்கள் கிழமை மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தற்போது சாலை உயர்த்தி அமைக்கப்பட்டதால் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
     இதேபோல் போடி நகர் காமராஜர் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் காவல் நிலையம் அருகே தனியார் வணிக வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதில் தரை தளத்தில் இருந்த கடைகளில் பொருட்கள், வர்த்தக இயந்திரங்கள் சேதமடைந்தன. பல இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
     போடி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டன. போடி அரசு மருத்துவமனை அருகே அரசு பேருந்து ஒன்று பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து பயணிகள் அப்பகுதியிலேயே இறக்கி விடப்பட்டனர். 
     போடி அருகே சில்லமரத்துப்பட்டி 1 ஆவது வார்டில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பாலு என்பவரும், அவரது மனைவி பொட்டியம்மாள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.