நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கம்பம் பகுதியில் கொத்தமல்லி விளைச்சல் அமோகம்: விலை குறைவால் விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்தும் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On :7 ஆகஸ்ட் 2018, 5:12 am IST

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்தும் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
       கம்பம்  பகுதிகளில் குறுகிய காலத்தில் பலன் கிடைக்கும் காய்கறிகளில் கொத்தமல்லி தழை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. 
    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நிலத்தடி நீர்மட்டம்  அதிகரித்ததால், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் இருப்பு உயர்ந்தது. இந்த பருவ காலத்தில், குறுகிய கால பயிர்களான பீட்ரூட், கீரை வகைகள் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டதில், தற்போது கொத்தமல்லி தழை அறுவடைக்கு வந்துள்ளது.
    அதேநேரம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சந்தைகளிலிருந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டாரச் சந்தைகளுக்கு கொத்தமல்லி தழை விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், சந்தைகளில் கொத்தமல்லிக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
    கடந்த வாரங்களில் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30-க்கு விற்பனையானது. தற்போது ரூ.7-க்கு விற்பனையாகிறது. இதை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், அறுவடையின் மூலம் ரூ.14 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளதால், கம்பம் பகுதி விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.