/

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: மூன்றாவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க மேகமலை வன உயிரின சரணாலயத்தினர் தடை விதித்துள்ளனர்.
கேரளம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதன்படி, மணலார் அணை நீர் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிப்பதற்கு மேகமலை வனஉயிரின சரணாலயத்தினர் தடை விதித்துள்ளனர். 
இந்நிலையில் புதன்கிழமையும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து இருந்ததால், அருவியில் குளிப்பதற்கான தடை நீடித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.