தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுகாதார வளாகம் கட்டித்தர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அப்பிபட்டி கிராமம் சின்னமனூர்- எரசக்கநாயக்கனூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை.
இதுகுறித்து சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லையாம். இதனை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுகாதார வளாகம் கட்டித் தர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி மற்றும் ஓடைப்பட்டி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன்
ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் இப்பகுதி பெண்கள், தூய்மை திட்டத்தின் மூலம் இக்கிராமத்தில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த
வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி, கழிப்பிடம்
கட்ட இடங்கள் தேர்வு செய்துள்ள நிலையில், விரைவில் அதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.