கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேரள வாடல் நோய் தாக்குதல்: தென்னை மரங்கள் வெட்டி அழிப்பு

தேனி மாவட்டத்தில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால் விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:17 pm

DIN

தேனி மாவட்டத்தில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால் விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். 
   தேனி மாவட்டத்தில் தென்னை மரங்களில் கேரள வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த நோய்கள் தாக்குதல் காரணமாக பெரும்பான்மையான தென்னை மரங்களில் உற்பத்தி குறைந்துவிட்டது. இதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் விரக்தி அடைந்த விவசாயிகள் நோய் தாக்கிய மரங்கள் அழித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த லட்சணக்கான தென்னை மரங்களை வேரோடு வெட்டி அழித்து விட்டனர்.மேலும் உத்தமபாளையம்,கோம்பை, சீலையம்பட்டி, கோட்டூர் , மார்க்கையன்கோட்டை, சின்னமனூர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலான இருந்த தென்ன மரங்கள் போதுமான மழை பொழிவு இல்லாத நிலையில் கருகி அழிந்தன. இந்நிலையில் தென்னை மரங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்தது. இதனால் ரூ.10 -க்கு விற்பனையான தேங்காய் ரூ.25 வரையில் விற்பனையாகிறது. வீடுகளில் சமையலுக்கு முக்கிய தேவையாக இருக்கும் தேங்காய் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இது குறித்து விவசாயிகள் தெரிவித்தது: தென்னை விவசாயத்தை நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வந்தனர். ஆனால், கேரள வாடல் மற்றும் பருவமழை குறைவு காரணமாக தென்னை விவசாயம் அழிவை நோக்கி சென்றுவிட்டது. சில பகுதிகளில் மாற்று விவசாயத்துக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். பல இடங்களில் தோட்டங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன என்றனர்.
வேளாண்துறை அதிகாரிகள் கூறியது: கேரள வாடல் நோயை இயற்கை உரங்கள் மூலமாக படிப்படியாகக் கட்டுப்படுத்தலாம். ஆனால் நோயை கட்டுப்படுத்த சில வருடங்கள் ஆகும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட வறட்சியால் தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.