சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேரளத்துக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்துவதற்காக தமிழக எல்லை குமுளி வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை,

News image
Updated On :9 ஜூலை 2018, 2:20 am

DIN

கேரளாவுக்கு கடத்துவதற்காக தமிழக எல்லை குமுளி வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 தேனி மாவட்டம், கூடலூர், கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் கேரள மாநிலம் குமுளி மலைப்பாதை வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை, குமுளியில் உள்ள தமிழக எல்லைப் பகுதியில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சாலையோர வனப்பகுதியில் அடர்ந்த செடி, கொடிகளுக்கு இடையே 25 கிலோ எடையில், 20 சாக்கு பைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 
அவற்றை கைப்பற்றிய, வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் உத்தமபாளையத்தில் உள்ள உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் அவற்றை பதுக்கி வைத்தவர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.