/

பொம்மிநாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி, ஆதி திராவிடர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழ

Updated On :14 மே 2018, 7:15 pm

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி, ஆதி திராவிடர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொம்மிநாயக்கன்பட்டி, ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: பொம்மிநாயக்கன்பட்டி, ஆதிதிராவிடர் காலனியில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் குழாய், பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தவித்து வருகிறோம். எனவே இப்பகுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.