நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

போடி அருகே பாறையில் வழுக்கி விழுந்து இளைஞர் சாவு

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றைக் கடக்கும்போது பாறையில் வழுக்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

Updated On :8 அக்டோபர் 2018, 7:47 am IST

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றைக் கடக்கும்போது பாறையில் வழுக்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
     போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி, வெண்ணிமலை தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் மகன் பிருதிவிராஜ்  (23). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை தோட்ட வேலைக்கு செல்வதற்காக ஊத்தாம்பாறை அருகே கத்தாழம்பாறை பகுதிக்கு சென்றுள்ளார். இவருடன் மேலும் 2 பேர் சென்றுள்ளனர்.     ஊத்தாம்பாறை ஆற்றை கடந்து சென்றபோது மற்ற தொழிலாளர்கள் கடந்து விட்ட நிலையில், பிருதிவிராஜ் கடக்கும்போது பாறையில் வழுக்கி தண்ணீரில் விழுந்து விட்டார். இதனை கவனிக்காத தொழிலாளர்கள் அவரை காணாமல் திரும்பி வந்து பார்த்துள்ளனர்.
     அப்போது தண்ணீரில் ரத்தம் தெரியவே அப்பகுதியில் தண்ணீரில் தேடியபோது தலையில் அடிபட்டு பிருதிவிராஜ் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.