100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

வைகை அணை நீர்மட்டம் 65 அடியாக சரிவு: 58-ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்: விவசாயிகள் கவலை

வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்தது. 58-ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடுவது வியாழக்கிழமை

Published On :

வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்தது. 58-ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடுவது வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் முழுக்கொள்ளவான 69 அடியை எட்டியது.  இதற்கிடையே வைகை அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.  இருந்த போதிலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணையின் நீர்மட்டம் 20 நாள்களுக்கும் மேலாக 69 அடியில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து  18 நாள்களுக்கு  மொத்தம் 1,560 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 3 நாள்களில் வைகை அணையின் நீர்மட்டம்  4 அடி சரிந்து 65 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர்மட்டம் 67 அடியாக இருந்தால் மட்டுமே 58-ஆம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும். 
தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்ததால், கடந்த 20 நாள்களாக  58-ஆம் கால்வாய் திட்டத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. இந்த கால்வாயில் வெள்ளோட்டமாக விநாடிக்கு 80 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பல கண்மாய்களுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. இந்நிலையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் 58-ஆம் கால்வாய் மூலம் பயனடையும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.