
தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை விநாயகர் சதூர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 இடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், கன்னிமூல கணபதிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. கணேசகந்த பெருமாள் கோயிலில் ஸ்ரீசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள், உற்சவ மூர்த்தி அலங்கார ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருந்தன. பூமலைக்குண்டு, ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் கிராம பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாகச் சென்று விநாயகரை வழிபட்டனர். பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாலசுப்பிரமணியர் கோயில் அருகே வராகநதி ஆற்றில் கரைக்கப்பட்டன.
கம்பம்: கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிசுவநாதர் சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஆதிசக்தி விநாயகர், கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர், வேலப்பர் கோவில் வளாகத்தில் உள்ள வேலப்பர் விநாயகர்
மாலையம்மாள்புரத்தில் உள்ள ராஜகணபதி, உத்தமபுரம் தங்கவிநாயகர் உள்ளிட்ட கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டன. பெண்கள் பொங்கல் வைத்தும் சுண்டல், கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தனர். கம்பம் அரசமரம் வீதியில் இந்து முன்ணனி சார்பில் 12 அடி உயர சிலை, இந்து ஆலயபாதுகாப்பு குழு சார்பில் வாலகுருநாதர் அங்காளீஸ்வரி கோயிலில் 9 அடி விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாலவிநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, விநாயகர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வைகைஅணைச் சாலையில் பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர் எஸ்.பி.எம். செல்வம் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, வாய்க்கால்பட்டி பகுதியில் 25 சிலைகளும், கோம்பை, பண்ணைப்புரம், சிந்தலைச்சேரி பகுதிகளில் 25 சிலைகளும், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், அய்யம்பட்டி, புலிக்குத்தி பகுதிகளில் 180 சிலைகளும், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிச்சேர்வைபட்டி,சுக்காங்கல்பட்டி,மூர்த்திநாயக்கன்பட்டி பகுதிகளில் 18 சிலைகளும் , ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் சென்டர் கேம்ப் பகுதியில் 1 சிலை என மொத்தம் 257 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அந்தந்த பகுதி பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) தேனி, போடி, உத்தமாபளையம், தேவாரம், கோம்பை, கம்பம், கூடலூர், ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. சின்னமனூரில் சனிக்கிழமை (செப்டம்பர் 15) விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





