நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தேனியில் அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

தேனி கர்னல் பென்னிகுயிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை

Updated On :26 பிப்ரவரி 2019, 1:38 am IST

தேனி கர்னல் பென்னிகுயிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியில், மாவட்ட அரசுத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள், அரசு விழாக்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதில், மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரா. பார்த்திபன், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், மாவட்டக் 
காவல் கண்காணிப்பாளர் 
வீ.பாஸ்கரன், அதிமுக மாவட்டச் செயலர் சையதுகான், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் ப. ரவீந்திரநாத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.