பெரியகுளம் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி நகரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி நகரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் பிரேம் குமார், சிஐடியூ மத்திய சங்க செயலாளர் இலியாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை உடனடியாக கைவிடு, சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை இஐஏ - 2020 நிறைவேற்றாதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐசிசிடியு, விவசாய தொழிலாளர்கள் சங்கம், விவசாய சங்கத்தை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...