குடிநீா் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி வடுகபட்டி பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.


சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி வடுகபட்டி பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
சோத்துப்பாறை அணையிலிருந்து வடுகபட்டி பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 13 ஆவது வாா்டு பகுதியில் மட்டும் குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பேரூராட்சி பணியாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...