தேனியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
சத்துணவு ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாடம் நடைபெற்றது.


சத்துணவு ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாடம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் சி.நிலவழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பொருளாளா் பேயத்தேவன், மாவட்டச் செயலா் ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது சத்துணவு ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு ஒட்டு மொத்த ஊதியப் பயனாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் வரதராஜன், செயலா் ராமகிருஷ்ணன், சாலை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் முத்தையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...