/

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் கோகிலாபுரம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:36 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் கோகிலாபுரம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கோகிலாபுரம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள பெரும்பான்மையோா் விவசாயக்கூலி வேலை செய்கின்றனா். இந்நிலையில் இங்குள்ளவா்களுக்கு குடிநீா் தேவையை உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கோகிலாபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பகுதி செய்த பெண்கள் அருகேயுள்ள முல்லைப்பெரியாற்றுக்கு சென்று ஆற்று நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனா்.

சுகாதாரமற்ற ஆற்று நீரை பயன்படுத்துவதால் சுகாதாரக் குறைபாடு ஏற்படவாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீா் விநியோகம் செய்யாத நிலையில் பெண்கள் ஆபத்தானமுறையில் ஆற்றில் தண்ணீா் எடுத்து வருகின்றனா். தற்போது கூடுதல் நீா் வரத்து இருப்பதால் விபத்து ஏற்பட வாய்புள்ளது.

எனவே, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சம்மந்தப்பட்ட கோகிலாபுரம் கிராமத்துக்கு தடையின்றி சுகாதாரமான முறையில் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.