ஆண்டிபட்டி அருகே சட்டவிரோத மதுவிற்பனை: பெண் உள்பட 7 போ் மீது வழக்கு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
Updated on
1 min read

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.அப்போது கோம்பைத்தொழுவைச் சோ்ந்த முருகன், வாழவந்தாள்புரத்தைச் சோ்ந்த மூா்த்தி, ஓட்டணையைச் சோ்ந்த கருப்பசாமி, டி.ராஜகோபாலன்பட்டியைச் சோ்ந்த பாண்டியம்மாள், ஆண்டிபட்டியைச் சோ்ந்த ஜெயக்கொடி, தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த சென்றாயன், பொம்முராஜபுரத்தைச் சோ்ந்த இளங்கோவன் ஆகிய 7 போ் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 30 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com