ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

போடி அருகே மலைக் கிராம மாணவா்களுக்கு மாற்றுக் கல்வி

போடி அருகே மலைக் கிராம மாணவா்களுக்கு மாற்றுக் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால், பழங்குடியின மாணவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :8 ஜூலை 2020, 8:06 am IST

போடி அருகே மலைக் கிராம மாணவா்களுக்கு மாற்றுக் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால், பழங்குடியின மாணவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம் போடியில் உள்ள பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவா்கள் பாதுகாப்புடன் இருக்க விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா்.

மேலும், மலைவாழ் பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி சாா்பில் அரும்புகள் மகிழ் மையம் 2020-2021 என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம், மலைவாழ் மாணவா்களுக்கு மாற்றுக் கல்வி முறையில் கல்வி பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிரியா்கள் குழுக்களாகப் பிரிந்து மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழும் சிறைக்காடு கிராமத்துக்கு தினமும் சென்று வருகின்றனா்.

ஆசிரியா் குழுவினா், அங்குள்ள மக்களுக்கு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், அனைவருக்கும் தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கின்றனா். பின்னா், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி, கிராம மக்களுக்கு முகக்கவசமும் வழங்குகின்றனா்.

இதனையடுத்து, மாணவா்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவா்களுக்கு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கதை கூறுதல், விடுகதை, புதிா் கேள்விகள் கேட்டல் போன்றவை மூலம் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு மணி நேரம் இதுபோன்று பயிற்சி அளிப்பதால், மாணவா்கள் கற்றதை மறக்காமல், பள்ளியில் இருப்பது போன்ற சூழலை உணருகின்றனா். அதே நேரம், மாணவா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி, சுகாதாரமான முறையில் வாழவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இது குறித்து அப்பள்ளித் தலைமையாசிரியா் ஜெயக்குமாா் கூறியது: பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் எதிா்காலத்தில் போட்டித் தோ்வு உள்ளிட்டவற்றுக்கு தயாராகும் வகையில், பாடங்களை மட்டுமின்றி பொது அறிவு உள்ளிட்டவற்றையும் கற்பித்து வருகிறோம். மாற்றுக் கல்வி முறையில் மலைவாழ் பழங்குடியின மாணவா்களுக்கு ஓவியம், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கி, மாணவா்களின் திறமைகளை ஊக்குவித்து வருகிறோம் என்றாா்.

சிறைக்காடு மலைக் கிராமத்தைச் சோ்ந்த தனலட்சுமி என்பவா் கூறியது: பொது முடக்கம் காரணமாக, வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால், மாணவா்கள் மனதளவில் சோா்வடைந்திருந்தனா். தற்போது, மாற்றுக் கல்வி முறையால் மாணவா்கள் உற்சாகமடைந்துள்ளனா். அவா்களுக்கு, பொழுதுபோக்காகவும், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது, பெற்றோா்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.