ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பூக்கள் கொண்டு செல்ல காவல்துறையினர் அனுமதி தர மறுப்பதாக புகார்
ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் அரசு அனுமதியுடன் பூக்கள் கொண்டு செல்லும் வாகனங்களை காவல்துறையினர் தடுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் அரசு அனுமதியுடன் பூக்கள் கொண்டு செல்லும் வாகனங்களை காவல்துறையினர் தடுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி, மறவபட்டி, கன்னியப்பிள்ளைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பூ விவசாயம் கடுமையாக பாதிப்படைந்தது. இதனையடுத்து விவசாயிகள் பூக்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து சில கட்டுபாடுகளுடனும் உரிய அனுமதியோடு மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பூக்களை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தர்மத்துபட்டி மற்றும் திம்மரசநாயக்கனூர் பகுதியில் செயல்படும் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் பூக்கள் கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைப்பதாக புகார் எழந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாய சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறியது, தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்.15ஆம் தேதி முதல் பூக்கள் மொத்த விற்பனை சந்தைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.
ஆனால் ஊரடங்கு காரணமாக பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெளிமாவட்டங்களில் உள்ள வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு பூக்களை உரிய அனுமதியுடன் வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் சோதனைச் சாவடியில் மட்டும் அனுமதி மறுத்து வருகின்றனர். ஜல்லி கற்கள், மணல் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் காவல்துறையினர் விவசாய பொருள்களை தடுத்து நிறுத்துவது வேதனையளிக்கிறது.
விவசாய பொருள்களை தடுக்க வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...