பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கம்பத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரைபோலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:06 pm

DIN

கம்பத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரைபோலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கம்பம் வடக்கு காவல் சாா்பு- ஆய்வாளா் விஜய் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் சாக்குப் பையுடன் நின்றிருந்தவரை பிடித்து, அந்த சாக்குப் பையை சோதனை செய்தனா்.

அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் கம்பம்- கோம்பை சாலையைச் சோ்ந்த அன்னக்கொடி மகன் ராஜேஷ் (36) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.