கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மற்றும் திராட்சைத் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து புத்தக வெளியீட்டு விழா நடத்தினர்.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி யில் வீர நாகம்மாள் கோவில் வளாகத்தில் புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கி, மீன்கொத்திப் பறவை என்ற நூலை வெளியிட்டார்.
மேலும் தேனி ராஜசேகரன் முள்வேலி முடிச்சுகள் என்ற நூலையும், திமுக செயற்குழு உறுப்பினர் குரு.இளங்கோ, திக்கெட்டும் திராவிட தீ பரவட்டும் என்ற நூலையும், மாநில முற்போக்கு கலை இலக்கிய மேடை செயலாளர் அம்பிகா குமரன் தொட்டில் குழந்தைகள் என்ற நூலையும், 5 மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளர் பொன்.காட்சிகண்ணன், களவு போன நிலா என்ற நூலையும், தேனி விசாகன் நிழலில் ஒரு கவிஞன் என்ற நூலையும், ரமேஷ், மை சிந்திய கவிதை என்ற நூலையும், பேராசிரியர் கோ.தெய்வநாயகம் திராட்சை ரசம் என்ற நூலையும் வெளியிட்டார்.
திராவிட கண்ணன், வேலு கணேஷ், அழகேசன், பிரசாத் சரவணன் ஆகியோர் புத்தக ஏற்புரையாக பேசினர்.
ஏற்பாடுகளை, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மற்றும் திராட்சைத் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒரே நேரத்தில் 2, 3 இந்திய அணிகளை விளையாட வைக்கலாம்..! சூர்யகுமார் அதிரடி கருத்து!

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

