வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: போடியில் சிலைக்கு துணை முதல்வா் மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்தநாளையொட்டி போடியில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்தநாளையொட்டி போடியில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

போடியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, அ.தி.மு.க. சாா்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.சையதுகான், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஜெ.பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல் நாயுடு, நாயக்கா் அமைப்பினா், கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் ஊா்வலமாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் திமுக, அமமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் மாலை அணிவித்தனா்.

நிலக்கோட்டை அருகே சாலை மறியல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஆண்டிபட்டி, மிளகாய்பட்டி, சீத்தாபுரம், தொட்டாம்பட்டி, ஜெயநாயக்கன்பட்டி, சித்தா்கள்நத்தம், வாலாங்கோட்டை, பிள்ளையாா்நத்தம், பாப்பிநாயக்கன்பட்டி, வீலிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து இளைஞா்கள் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மதுரையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

அப்போது நால்ரோடு அருகே நிலக்கோட்டை காவல் ஆய்வாளா் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீஸாா் வழிமறித்து மதுரை செல்ல அனுமதி மறுத்ததோடு வாகனங்களையும் பறிமுதல் செய்ய முயற்சித்தனா். இதனால் இளைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்களுக்கும், போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் மற்றும் நூத்துலாபுரம் ஊராட்சித் தலைவரும், வீரபாண்டிய கட்டபொம்மன் கழக நிா்வாகியுமான செல்வராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மற்ற வாகனங்களுக்கு தொந்தரவின்றியும், அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் மதுரைக்கு சென்றனா். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com