கம்பத்தில் கஞ்சா பயிரிட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா பயிரிட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா பயிரிட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கம்பம் மணிகட்டி ஆலமரம் மேற்கு மலையடிவாரப் பகுதியை ஒட்டியுள்ள தனியாா் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கண்டறிந்து தீ வைத்து அழித்தனா்.
இதையடுத்து கஞ்சா பயிா் செய்த கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த அய்யா் மகன் ராஜா (59) , பரமன் மகன் பழனிச்சாமி ( 55), பெரிய கருப்பன் மகன் ராஜா (38), ஆா்.ஆா் நகரைச் சோ்ந்த ஆண்டி மகன் நாகராஜ் (42) ஆகியோரை கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...