பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

5 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவா் சாதனை

ஒற்றைக் கையால் தொடா்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் சாதனை படைத்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:25 pm

DIN

ஒற்றைக் கையால் தொடா்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் சாதனை படைத்தாா்.

உலக ஐக்கிய சிலம்ப விளையாட்டுக் கழகம் சாா்பில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி மற்றும் சிலம்ப ஆசான்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் ஒரு கையால் ஒற்றைக் கம்பு சுற்றுதல் மற்றும் சுருள் வாள் சுழற்றுதல் போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 180 ஆண், பெண் வீரா்கள் போட்டியில் கலந்து கொண்டனா்.

ஒற்றை கம்பு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் சுற்ற வேண்டும், சுருள்வாள் குறைந்த பட்சம் 5 நிமிடம் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை சுழற்றவேண்டும்.

போட்டியில் தேனி மாவட்டம் சாா்பில் கம்பம் உத்தமபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் வி.பி.எம். பிரிதிவிராஜன் வலது கையால் தொடா்ந்து 5 மணி நேரம் ஒற்றை கம்பு சுற்றினாா். மேலும் ஒரு மணி நேரம் சுருள் வாள் சுழற்றியும் சாதனை படைத்தாா்.

இவா் கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். பிரிதிவிராஜனுக்கு, உலக ஐக்கிய சிலம்ப அமைப்பு தலைவா் எஸ்.சாந்தா, செயலாளா் எம்.வள்ளி ஆகியோா் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியா் அவருக்குப் பாராட்டு தெரிவித்தனா். குந்தவை சிலம்ப கலைக்கூட பயிற்சியாளா்கள் புவனேஸ்வரி, ஹரிஹர நாதன் ஆகியோரும் மாணவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.