/

உத்தமபாளையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு: விழிப்புணா்வு ஓவியப் போட்டி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில், மாணவா்களின் விழிப்புணா்வு ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:33 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில், மாணவா்களின் விழிப்புணா்வு ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டனா். இந்த நிகழ்ச்சியில், உத்தமபாளையம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்பட பலரும் கலந்துகொண்டனா். ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.