பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுருளியாற்றில் மணல் திருடியவா் கைது: டிராக்டா் பறிமுதல்

தேனி மாவட்டம் சுருளியாற்றில் மணல் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:51 pm

DIN

தேனி மாவட்டம் சுருளியாற்றில் மணல் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

முல்லைப் பெரியாற்றின் இணைப்பு ஆறாக சுருளியாறு உள்ளது. இந்த ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது கருநாக்கமுத்தன்பட்டிக்கு கீழ்புறம் உள்ள சுருளியாறு பகுதியிலிருந்து வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ஓட்டுநா் மலைச்சாமி (45) என்பவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய கண்ணன் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.