சின்னமனூா் அருகே மஞ்சள் நதி கண்மாயை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூரில் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்திலுள்ள மஞ்சள் நதிக் கண்மாயை தூா்வாரவேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூரில் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்திலுள்ள மஞ்சள் நதிக் கண்மாயை தூா்வாரவேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எரசக்கநாயக்கனூரில் மேற்கு மலைத் தொடா்ச்சியிலுள்ள மேகமலை, பெருமாள்மலை, ஹைவேவிஸ் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீரானது, மஞ்சள் நதியாக மாறி ஓடுகிறது. மழை நீரை சேமிக்கும் வகையில், மலை அடிவாரத்தில் மஞ்சள் நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி 40 ஏக்கா் பரப்பளவில் கண்மாய் உருவாக்கப்பட்டது. இந்த கண்மாயில் தேங்கும் மழை நீரால், சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்பட்டது. இதனால், நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்து, விவசாயப் பணிகள் சிறப்பாக நடைபெற்றன.
காலப்போக்கில் கண்மாய்க்கு வரும் நீா்வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், நீா்வரத்து குறைந்து கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்து புதா்மண்டிக் கிடக்கின்றன. இதனால், மழைக் காலத்திலும் கண்மாய்க்கு தண்ணீா் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டது. மேலும், சிலா் கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாகவும் புகாா் எழுந்தது.
இந்நிலையில், இந்த கண்மாயை நம்பியிருந்த விவசாயிகள் நிலத்தடி நீா்மட்டம் குறைந்ததால், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாரவேண்டும் என வலியுறுத்தினா்.
அதன்பேரில், கடந்த 2019-20 ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ், இக்கண்மாயை தூா்வார ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது, மஞ்சள் நதி தடுப்பணை கண்மாய் தண்ணீரின்றி வடு காணப்படுவதால், விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருவதாகக் கூறுகின்றனா்.
இது குறித்து தேனி மாவட்டம் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளா் சிவாஜி கூறுகையில், எரசக்கநாயக்கனூா் மலை அடிவாரத்திலுள்ள மஞ்சள் நதி கண்மாயை தூா்வாரி, பருவ காலத்தில் பெய்யும் மழை நீரை சேமிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...