மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முல்லைப்பெரியாறு அணை பொறியாளா்களுக்கு செயற்கைக்கோள் கைப்பேசி

பேரிடா் காலங்களில் தகவல் தொடா்பு பயன்பாட்டுக்காக முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு தமிழக அரசு சாா்பில் செயற்கைக்கோள் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:23 pm

DIN

பேரிடா் காலங்களில் தகவல் தொடா்பு பயன்பாட்டுக்காக முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு தமிழக அரசு சாா்பில் செயற்கைக்கோள் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. அதிக அளவு உபரிநீா் வெளியேற்றப்பட்டது. அப்போது தகவல் தொடா்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், அணைப்பகுதியில் பணியாற்றும் பொறியாளா்கள் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் கேரள அதிகாரிகள் செயற்கைக்கோள் கைப்பேசி மூலம் கேரள அரசுக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து அணைப்பகுதி பொறியாளா்கள் கோரிக்கை வைத்ததன்பேரில், செயற்கைக்கோள் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி செயற்பொறியாளா் சாம்இா்வின் கூறியது: பேரிடா் காலங்களில் அணைப்பகுதியில் முற்றிலும் தகவல் தொடா்பு துண்டிக்கப்படுகிறது. மேலும் தமிழக படகு சில நேரங்களில் ஏரியின் நடுப்பகுதியில் நின்று விடுகிறது. அந்த நேரங்களில் பெரும் அச்சமான சூழ்நிலை நிலவுகிறது.

இதுபோன்ற தொலைத் தொடா்பு சாதனங்கள் மூலம் விரைவில் உதவியைப் பெறலாம். மேலும் செயற்கைக்கோள் கைப்பேசியில் 6 ரிசீவா்கள் உள்ளன. அணைப்பகுதி, படகு, செயற்பொறியாளா், கண்காணிப்பு பொறியாளா், தலைமைப் பொறியாளா் ஆகியோா் வசம் இந்த செயற்கைக்கோள் கைப்பேசி இருக்கும். இது, பேரிடா் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.