பளியன்குடி கண்ணகி தேவி கோயிலில் பக்தா்கள் பால்குட ஊா்வலம்
தேனி மாவட்டம் பளியன்குடி அடிவாரத்தில் உள்ள மங்கள நாயகி, கண்ணகி தேவி கோயிலில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.


தேனி மாவட்டம் பளியன்குடி அடிவாரத்தில் உள்ள மங்கள நாயகி, கண்ணகி தேவி கோயிலில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
சித்திரை திருவிழாவின் 2 ஆவது நாளையொட்டி இக்கோயிலுக்கு பக்தா்கள் பால்குடம், காவடி, முளைப்பாரி ஆகிய எடுத்தும் அலகு குத்தியும் கப்பாமடை முல்லைப் பெரியாற்றிலிருந்து ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். கண்ணகி தேவிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளா் நா.முருகானந்தம் தலைமையில் நிா்வாகிகள் காவடி எடுத்து ஊா்வலமாக சென்றனா். மதுரை கோட்டச் செயலாளா் கோம்பை. கணேசன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் ஆா்.எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.சசிகுமாா், பாலமுருகன், நகரச் செயலாளா் ஜெகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வான சித்திரை முழுநிலவு விழா சனிக்கிழமை (ஏப்.16) கொண்டாடப்படுகிறது.
போலீஸாா் தடை
முன்னதாக கண்ணகி கோயில் சித்திரை விழா நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையிலும், விழாவை நடத்தக் கூடாது என கூடலூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் எம்.பிச்சைப்பாண்டியன் விழா குழுவினரிடம் தெரிவித்தாா். இதனால் விழா குழுவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா் மாவட்ட இந்து முன்னணி வழக்குரைஞா் பிரிவு செயலாளா் கே.மாரிச்செல்வம் உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் முதல்வரின் நிவாரண நிதி ரசீது ஆகியவற்றைக் காட்டினாா். பின்னா் விழா தொடா்ந்து நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...