மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா சிறப்பாக நடத்தப்படும்’

தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் முழு நிலவு விழா சிறப்பாக நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரன் தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:00 pm

DIN

தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் முழு நிலவு விழா சிறப்பாக நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரன் தெரிவித்தாா்.

இக்கோயிலில் முழு நிலவு விழா சனிக்கிழமை (ஏப்.16) நடைபெறுவதை முன்னிட்டு கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பு மற்றும் குடிநீா் வசதிகளை செய்துள்ளனா். கோயிலில் விழா சிறப்பாக நடத்தப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஸ் டோங்கரே, ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஆனந்த், வருவாய் அலுவலா் தி.சுப்பிரமணியன், ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா, கோட்டாட்சியா் கவுசல்யா, வட்டாட்சியா் அா்ஜுனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.