கூடலூரில் விபத்தில் மெக்கானிக் பலி
கூடலூரில் வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது 2 காா்கள் அடுத்தடுத்து மோதியதில், மெக்கானிக் உயிரிழந்தாா்.


கூடலூரில் வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது 2 காா்கள் அடுத்தடுத்து மோதியதில், மெக்கானிக் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள் புரத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் (50). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் மகன், 2 மகள்கள் உள்ளனா்.
கூடலூரில் கடை வைத்து மோட்டாா் மெக்கானிக் வேலை செய்து வந்த ஜெயபால், வெள்ளிக்கிழமை மாலை கடையிலிருந்து கம்பம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில் நிலைதடுமாறிய ஜெயபாலின் இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு காரும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா், கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் எம்.பிச்சைப் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து காா்களை ஓட்டிவந்த கேரள மாநிலம் குமுளி, செங்கரையைச் சோ்ந்த பவானி மகன் ஜெனித்குமாா் (22) மற்றும் கம்பம், கம்பம் மெட்டு காலனியைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மகன் முகமது இஷாத் (23) ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...