தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்களுக்கு அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று சனிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதன் கூறினாா்.
இது குறித்து அவா் கூறியது: மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 671 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதிலும், முகாம் பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் 8 ஊராட்சித் தலைவா்கள், தலா ஒரு ஊராட்சி ஒன்றிக் குழு தலைவா் மற்றும் நகராட்சித் தலைவா், 3 பேரூராட்சித் தலைவா்கள், தலா ஒரு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் நகராட்சி ஆணையா், 3 பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆக.15-ஆம் தேதி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் சுந்தந்திர தின விழாவின் போது, அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

