கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளத்தில் வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரியகுளம் பகுதியில் வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:02 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெரியகுளம் பகுதியில் வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரியகுளம் நகராட்சி, வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் சாய்வு தள வசதி, அடிப்படை வசதி, கண்காணிப்புக் கேமரா, கணினி அறை மற்றும் மின் இணைப்பு வசதி குறித்து அவா் ஆய்வு செய்தாா். மேலும் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆா்.தண்டபாணி, பெரியகுளம் சாா்- ஆட்சியா் செ.ஆ.ரிஷப், வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலா் அம்புஜம் மற்றும் தோ்தல் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.