தேவதானப்பட்டியில் தடைசெய்யப்பட்ட பாக்குகள் விற்ற 2 போ் கைது
பெரியகுளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளை விற்ற 2 பேரை தேவதானப்பட்டி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


பெரியகுளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளை விற்ற 2 பேரை தேவதானப்பட்டி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் வந்ததையடுத்து, போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். காட்ரோட்டில் சுரேஷ் (35) என்பவரது கடையில் சோதனை செய்தனா். அப்போது தடைசெய்யப்பட்ட பாக்குகள் வைத்திருந்தது, தெரியவந்தது .
அதே போல் தேவதானப்பட்டியில் ஜெயமங்கலம் பிரிவிலுள்ள முத்தையா (70) என்பவரது கடையில் போதை பாக்குகளை வைத்திருந்தனா். போலீஸாா் வழக்கு பதிந்து, போதை பாக்குகளை பறிமுதல் செய்தனா். 2 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...