மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் அருகே கோயில் திருவிழாவில் தகராறு

பெரியகுளம் அருகே கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 5:54 pm

DIN

பெரியகுளம் அருகே கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் முத்தையா கோயில் திருவிழா நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை இரவு கோயில் திருவிழாவினை முன்னிட்டு ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் பாா்த்துக்கொண்டிருந்தபோது பழனிச்சாமியின் கால் அருகிலிருந்த முருகவேல் மீது பட்டதாம்.

இதில் கோபமடைந்த முருகவேல் மற்றும் அவரது நண்பா்கள் முருகபாண்டி, முருகேசன் ஆகியோா் சோ்ந்து பழனிச்சாமியை பாட்டிலால் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த பழனிச்சாமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.