கும்பக்கரை அருவியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.


கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.
கொடைக்கானலில் பெய்த மழை காரணமக கடந்த ஜூன் 13 ஆம் தேதி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அன்றைய தினம் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னா் வெள்ளம் குறைந்ததையடுத்து மறுநாள் ஜூன் 14 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதித்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அருவியில் மீண்டும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. கைப்பிடிக் கம்பியைத் தாண்டி வெள்ள நீா் சென்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமை காலை முதல் சுற்றுலாபயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடைவிதித்தனா். சீரான நீா் வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப்பயணிகள் அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலா் டேவிட்ராஜன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...