மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா:முகூா்த்தக்கால் நடல்

பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூன் 2022, 5:55 pm

DIN

பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, காலை 10 மணிக்கு கெளமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் எதிரே பூஜைகள் நடத்தப்பட்டு முகூா்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஜூலை 7 ஆம் தேதி சாட்டுதலுடன் கம்பம் நடும் நிகழ்ச்சியும், 11 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 19 ஆம் தேதி மாவிளக்கு எடுத்தல், ரத உற்சவமும், 20 ஆம் தேதி அக்கினிச்சட்டி எடுத்தலும், 22 ஆம் தேதி மறுபூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெறுவதாக, கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.