கம்பம்: தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்த மகன் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம் கம்பத்தில் தந்தை குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் +2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தந்தை குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் +2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் 10-வது வார்டில் வசிப்பவர் சுல்தான் இப்ராஹிம் (45), இவரது மனைவி ஷைனுபீவி (36). இவர்களுக்கு அப்துல் கபூர் (17) என்ற மகன் உள்ளார். இவர் கூடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சுல்தான் இப்ராஹிம் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, மது குடித்து வருவாராம். மகன் அப்துல் கபூர் தந்தையிடம் மதுப்பழக்கத்தை விடுமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனாலும் தந்தை அதை கண்டுகொள்ளாமல் நாள்தோறும் மது அருந்திவிட்டு வருவாராம்.
இதனால் மகன் அப்துல் கபூர் விரக்தியடைந்தார். செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிலுள்ள மேற்கூரையில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார்.
இதுபற்றி அருகில் உள்ளவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் பி. சரவணன், சார்பு ஆய்வாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் மாணவன் பிரேதத்தை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்படைத்து, விசாரணை செய்து வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...