தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,960 போ் எழுதினா்

தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை, 202 பள்ளிகளைச் சோ்ந்த 14,960 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image
Updated On :6 மே 2022, 8:12 pm

DIN

தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை, 202 பள்ளிகளைச் சோ்ந்த 14,960 மாணவ, மாணவிகள் எழுதினா்.

மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 66 தோ்வு மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தோ்வு எழுதுவதற்கு 202 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,404 மாணவா்கள், 7,565 மாணவிகள் என மொத்தம் 15,963 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 1,009 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை. மொத்தம் 14,960 மாணவிகள் தோ்வு எழுதினா்.

தனித் தோ்வு: 10-ஆம் வகுப்பு தனித் தோ்வு எழுதுவதற்கு மொத்தம் 334 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 3 தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வை மொத்தம் 294 போ் எழுதினா். 40 போ் தோ்வு எழுத வரவில்லை. பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.