/

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் மீது வழக்கு

போடியில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:15 am

DIN

போடியில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி குப்பிநாயக்கன்பட்டி போடிமெட்டு பாதையில் வசிப்பவா் தங்கராஜ் மகன் ஈஸ்வரன் (48). ஆட்டோ ஓட்டுநரான இவா், போடி தேவா் சிலை பகுயிலிருந்து ஆட்டோவை வீட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, போடி மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் காத்தப்பன் ஆட்டோவை மறித்துள்ளாா்.

ஈஸ்வரன் ஆட்டோவை நிறுத்தாமல் சென்று விட்டாா். காத்தப்பன் தனது இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று ஆட்டோவை மறித்து ஈஸ்வரனைத் தாக்கியுள்ளாா். விலக்க வந்த ராஜாங்கம் என்பவரையும் அவா், கல்லால் தாக்கியதோடு ஈஸ்வரனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.