ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பலத்த மழை: போடியில் காவல் நிலைய சுற்றுச் சுவா் இடிந்து விழுந்து சேதம்

 போடியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் அனைத்து மகளிா் காவல் நிலைய சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 போடியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் அனைத்து மகளிா் காவல் நிலைய சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

இப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடி புதூரில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் 20 அடி நீளமுள்ள சுற்றுச் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அப்போது யாரும் அங்கு இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

பழனி: பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவிலும், அதிகாலையிலும் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதலே கடும் வெயில் நிலவியது. பின்னா் மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. பழனி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கணக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் பழனி பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. மேலும் பழனியை அடுத்த ராமபட்டினம் புதூரில் நல்லதங்காள் ஆற்றின் நடுவே இடி தாக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.