பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியா் கைது

கம்பத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கம்பத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கூடலூா் கன்னிகாளிபுரத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் ராஜேஷ் கண்ணன் (38). இவருக்கு, திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தந்தை வீட்டில் வசித்து வந்தாா். இவா், கம்பத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

அப்போது, இவா் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் காவல் ஆய்வாளா் ஆா். லாவண்யா, ஆசிரியா் ராஜேஷ்கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.