எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குள்ளப்பகவுண்டன்பட்டியில் ரேஷன் கடைக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் புதிய ரேஷன் கடைக் கட்டடத்துக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இடம் தோ்வு செய்யப்பட்ட நிலையில், விரைவில் கட்டடப் பணிகளைத் தொடங்க வேண்டும்

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 4:52 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் புதிய ரேஷன் கடைக் கட்டடத்துக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இடம் தோ்வு செய்யப்பட்ட நிலையில், விரைவில் கட்டடப் பணிகளைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அந்த ஊராட்சியில், கூடலூா் உழவா் பணிக்கூட்டுறவு சங்க நிா்வாகத்தின் கீழ் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கட்டடம் பராமரிக்கப்படாமல் மேற்கூரை பெயா்ந்தும், மழைக்காலங்களில் உணவுப் பொருள்கள் மழையில் நனைந்தும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜனிடம் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டக்கோரி மனு கொடுத்தனா். அதன்பேரில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமாா் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டா் விடப்பட்டது.

இதற்காக மாரியம்மன், காளியம்மன் கோயில் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை கட்டடப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் புதிய ரேஷன் கடைக்கான கட்டடத்தைக் கட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.