பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மாங்குளம் பகுதியில் தண்ணீர் குடிக்கச் சென்ற யானை தவறி விழுந்து உயிரிழப்பு

மாங்குளம் பகுதியில்  காட்டு யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததை  வனத்துறையினர்  மீட்டினர்.

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 6:37 am

மாங்குளம் பகுதியில்  காட்டு யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததை  வனத்துறையினர்  மீட்டினர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மாங்குளம் என்ற இடம் என்பது யானைகள் அதிகளவு உலவும் யானைக்காடாகும். மேலும்  சர்வதேச சுற்றுலா தலமான மூணாறு அருகே உள்ள மாங்குளத்தில் யானைகள் கூட்டம் தண்ணீர் பருக வருவது வழக்கமாகும். இதை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்வர்.

இந்நிலையில் தண்ணீர் தேடி வந்த யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் உள்ள தண்ணீர் குட்டையில்  தவறி விழுந்து கிடந்தது. அப்பகுதி வழியாக  சென்ற கூலித் தொழிலாளர்கள்  யானை தண்ணீர் குட்டைக்குள் விழுந்து கிடப்பதை கண்டு  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மூணாறு வனத்துறையினர் சென்று பார்த்த போது உயிரிழந்த நிலையில் கிடந்தது. யானையின் உடலை வன ஊழியர்கள் மூலம் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இதுபற்றி வனத்துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறியது, தண்ணீர் குடிக்க சென்ற யானை பாறைகளுக்கு இடையில் தவறி விழந்து காயங்கள் ஏற்பட்டு  உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.