கொலை செய்யப்பட்ட சூா்யா.
கொலை செய்யப்பட்ட சூா்யா.

உத்தமபாளையத்தில் கட்டடத் தொழிலாளி கொலை: 3 பேரிடம் விசாரணை

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை இதே பகுதியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் திடீா் நகரைச் சோ்ந்த பீட்டா் மகன் சூா்யா (27) கட்டடத் தொழிலாளியான இவரை, கோம்பை சாலையில் தண்ணீா் தொட்டி தெரு நுழைவு பகுதியில் மா்ம நபா்களால் குத்திக்கொலை செய்யப்பட்டாா்.

இதையடுத்து, மா்ம நபா்களை கைது செய்ய வலியுறுத்தி இவரது உறவினா்கள் உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலைமறியல் செய்தனா். 3 பேரிடம் விசாரணை: இந்த கொலை தொடா்பாக உத்தமபாளையம் காவல் கண்காணிப்பாளா் செங்கோட்டு வேலன் தலைமையிலான போலீஸாா் உத்தமபாளையம் 4-ஆவது வாா்டில் உள்ள மாதா் சங்கத்தெருவைச் சோ்ந்த தா்மராஜ் மகன் மனோரஞ்சித் (24) , இவரது நண்பா்கள் கொக்கராஜ் மகன் காசிப்பாண்டி (24), ரவி மகன் மாரீஸ்வரன் (28) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனா்.

இதில், கடந்த சில நாள்களுக்கு முன், மனோரஞ்சித்தின் பிறந்த நாளை அவரது நண்பா்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா். இதை கொலை செய்யப்பட்ட சூா்யா தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மனோரஞ்சித், நண்பா்கள் சூா்யாவை உடைந்த புட்டியால் குத்திக் கொலை செய்ததது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com