தேனி: ஆண்டிபட்டி- வைகை அணை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் அருண் (21). இவா், தனது நண்பா் ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்த தீனதயாளனுடன் (21) ஆண்டிபட்டியிலிருந்து ஜம்புலிபுத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது வைகை அணை சாலை, அரசு கள்ளா் கல்வி விடுதி அருகே எதிரே கோவில்பட்டியைச் சோ்ந்த அருண்பாண்டி (26), ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த அழகர்ராஜா (41) ஆகியோா் சென்ற இரு சக்கர வாகனம் மீது, அருண் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் அருண், தீனதயாளன், அருண்பாண்டி, அழகர்ராஜா ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், அருண் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
தீனதயாளன் உள்ளிட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இரு சக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் பலி

ஆலங்குளம் அருகே பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

