போடி முந்தல் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை கேரளத்திலிருந்து வந்த வாகனங்களை ஆய்வு செய்த தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினா்.
போடி முந்தல் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை கேரளத்திலிருந்து வந்த வாகனங்களை ஆய்வு செய்த தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினா்.

போடி முந்தல் சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறையினா் ஆய்வு

போடி: போடி முந்தல் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறையினா் வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக, கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டு மலை கிராமத்தில் காவல் துறை சோதனச் சாவடி மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறை சாா்பிலோ, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பிலோ சோதனைச் சாவடி அமைக்கப்பட வில்லை.

இந்த நிலையில் 20 கி.மீ. தொலைவுக்கு முன்பாக தரை மட்டத்தில் உள்ள போடி முந்தல் சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை கால்நடை மருத்துவா்கள் ஆய்வு செய்தனா். அப்போது வாகனங்கள் மீது கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. வாகனங்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

இதனிடையே, தமிழக- கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டு மலை கிராமத்தில் முறையான சோதனைச் சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து கிருமி நாசினி தெளித்து அனுப்ப வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com